
கோலாலம்பூர், ஏப் 28 – GOPIO எனப்படும் இந்தியா வம்சாவளி இயக்கத்தின் அனைத்துலக விழா பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் உள்ள விவேகானந்தர் ஆசிரமம் மற்றும் பள்ளியில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதிவரை நடைபெறும். இந்திய வம்சாவளி இயக்கத்தின் முதலாவது கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் தியாகம், அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் அவர்களின் பங்கேற்பை நினைவுகூறும் வகையில் இந்த அனைத்துல விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மலேசிய கோபியோ இயக்கத்தின் தலைவர் S. குணசேகரன் தெரிவித்தார். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டடத்தில் அவர் இதனை தெரிவித்தார். இநத நிகழ்வில் இந்திய தூதர் பி . என் ரெட்டி உட்பட பல முக்கிய பிரமுகர்கர் கலந்து கொண்டனர். மலேசிய கோபியோ தொடங்கப்பட்டு 25ஆவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
PIO அனைத்துலக விழா பிரிக்பீல்ட்ஸ் விவேகனாந்தா பள்ளி வளாகம், கந்தையா மண்டபம் . விவேகானந்தர் ஆசிரம மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறும். மூன்று நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழவில் சுமார் 2,000 கலைஞர்கள். கல்வியாளர்கள் உட்பட பலர் பங்கேற்பார்கள். பாரம்பரிய விளையாட்டுகள் ,கைவினை பொருள் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் இளைஞர்கள் சுற்றுப்பயணிகள் உட்பட 10,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொரிசியஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கோபியோ இயக்கத்தின் பேராளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.