குளுவாங், மார்ச் 7 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 நாள்கள் எஞ்சியிருக்கும் இவ்வேளையில் இந்திய வாக்காளர்களை கவர்வதற்காக
Layang – Layang சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பி.கே.ஆர் வேட்பாளர் டாக்டர் Maszlee Malik தமிழில் பேசினார். நடிகர் ரஜினிகாந்த் போல் கை அசைவுகளை காட்டி பேசும் 21 வினாடிகளைக் கொண்ட காணொளியையும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
வணக்கம் வாக்களிக்க மறந்துவிட வேண்டாம். கோவிட் 19 தொற்றுக்கு அஞ்ச வேண்டாம். SOP நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என் பெயர் மஸ்லி, Layang -Layang தொகுதிக்கான 1ஆவது எண்ண வேட்பாளர் நான் என
அவர் தமிழ் மொழியிலேயே அந்த காணொளியில் பேசியிருந்தார். முன்னாள் கல்வி அமைச்சருமான அவர் கடந்த நவம்பர் மாதம் PKR கட்சியில் இணைந்தார். அந்த காணொளியின் இறுதியில் சிவாஜி தெ போஸ் திரைப்படத்தில் ரஜனிகாந்த் தோற்றம் அளிப்பதுபோல் கறுப்பு நிற கண்ணாடியையும் மஸ்லி அணிந்திருந்தார்.
Layang Layang தொகுதியில் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளர் கே.அழகேந்திரன், தேசிய முன்னணியின் Abdul Muthalib Abdul Rahim , Parti Pejuang கட்சியின் Ahmad Shafiq ஆகியோரிடமிருந்து முன்னாள் கல்வி அமைச்சருமான Maszlee Malik போட்டியை சந்திக்கிறார். இந்த தொகுதியில் உள்ள 25,147 வாக்காளர்களில் 9 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.