Latestஉலகம்

இந்திய விமானப் படையின் முன்னாள் அதிகாரியும் மனைவியும் தற்கொலை

புதுடில்லி, மார்ச் 11 – இந்திய விமானப் படையின் முன்னாள் அதிகாரி Ajay Pal மற்றும் அவரது மனைடிவ Monika ஆகிய இருவரும் விஷம் அருந்தி தற்கொல செய்து கொண்டனர். 37 வயதுடைய Ajay மற்றும் 32 வயதுடை Monika வெவ்வேறு நேரத்தில் விஷம் அருந்தியதாக கூறப்பட்டது. தமது கணவர் வாயில் நுரை வந்த நிலையில் சுயநினைவின்றி இருந்ததைக் கண்ட மோனிக்கா உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார். தனது கணவர் இறந்தவிட்டதாக மருத்துவர்கள் கூறியவுடன் Monika அதிர்ச்சிக்குள்ளானார். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பிய அவர் விஷமருந்தியுள்ளார். வீட்டின் கதவை உடைத்து போலீஸ்காரர்கள் Monika வை மீட்டபோது அவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டது. இந்திய விமானப் படையிலிருந்து Ajay Pal அண்மையில்தான் விலகியுள்ளார். Ajay Pal – Monika தம்பதியர் ஒரு ஆண்டுக்கு முன்தான் திருமணம் செய்து கொண்டதாகவும் இவர்களது தற்கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!