Latestமலேசியா

இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு வரும் புதன்கிழமை பேசப்படும் – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன 15- இந்திய விவகாரங்கள் தொடர்பான பிரச்சனைகளை பிரத்தியேகமாக கவனிப்பதற்கான சிறப்பு அமைச்சரவை செயற்குழு அமைப்பது தொடர்பில் வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டு செயலாக்கம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்திருப்பதாக மஇகாவின் தலைவரும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று MIED நிறுவனத்தின் கல்விக் காசோலை வழங்கும் விழாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

இந்த சிறப்புச் செயற்குழு அமைப்பது குறித்து முன்னதாக தாமும் டத்தோஶ்ரீ சரவணனும் பிரதமரிடம் கலந்தாலோசித்ததாகவும் அப்போது பிரதமர் அதற்கான உறுதி வழங்கியதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை செயற்குழு விரைவில் அமைக்கப்படுவதன் வழி இந்திய சமூகத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு முனைப்பாக செயல்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!