Latestமலேசியா

இந்திய வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி உயர்ந்தாலும் உணவகங்களில் விலைகள் ஏறவில்லை – PRESMA

கோலாலம்பூர், ஆக 24 – வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை இந்தியா 40 விழுக்காடு உயர்த்திய போதிலும் உணவகங்களில் இப்போதைக்கு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படவில்லை. உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே இருந்த விலையிலேயே உணவக உரிமையையாளர்கள் நிலைநிறுத்தியுள்ளனர் என மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கமான? Presma வின் தலைவர் Datuk Jawahar Ali Taib Khan தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வரியை இந்தியா உயர்த்தியதை பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அறிந்து உணவக உரிமையாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதுவரை விநியோகிப்பாளர்கள் எங்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். எனவே இப்போதைக்கு உணவுப் பொருட்களில் விலையேற்றம் எதுவும் இருக்காது என அவர் கூறினார்.

இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரிமாஸ் துணைத்தலைவர் RC Krishnanனும் இதே கருத்தை கொண்டுள்ளார்.

வெங்காயத்தின் விலை உயர்வினால் உணவுப் பொருட்களின் விலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை 14 ரிங்கிட்டாக இருந்த 9 கிலோ பையில் உள்ள இந்திய வெங்காயம் செவ்வாய்க்கிழமை 19 ரிங்கிட்டாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இருந்தபோதிலும் வெங்காய விலை உயர்வினால் இப்போதைக்கு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது. அதே வேளையில் கோழி இறைச்சி மற்றும் காய்கறிகளின் விலைகள் குறித்தே எங்களது பெரிய கவலையாக இருக்கிறது என கிருஷ்ணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!