Latestமலேசியா

இந்திய வேலைக்கார பெண்ணை தாக்கியதோடு சம்பளம் தரவில்லை;  தாயும் மகளும் கைது

கிள்ளான், அக் 4 – தங்களது வீட்டில் வேலை செய்த இந்திய வேலைக்கார பெண்ணை தாக்கி அவருக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டனர்.

அந்த வீட்டிலிருந்து தப்பியோடிய அந்த இந்திய பிரஜை செப்டம்பர் 19ஆத் தேதி கிள்ளான் அஞ்சல் நிலையத்தின் ஐந்தடியில் காணப்பட்டார்.

அந்த பெண் நேற்றிரவு போலீசில் புகார் செய்துள்ளார் என வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் S . Vijaya Rao தெரிவித்தார். 26 வயதுடைய அந்த இந்திய பிரஜை 18 மாதம் அவ்வீட்டில் வேலை செய்துள்ளார்.

அந்த புகாரைத் தொடர்ந்து 49 வயதுடைய தாய் மற்றும் அவரது 28 வயதுடை மகள் ஆகிய இருவரும் விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!