ஜோர்ஜ் டவுன், பிப் 20- குடும்ப விவகாரங்கள் சார்ந்த சட்டங்கள் நாட்டில் ஒருங்கிணைக்கப்படாவிட்டால் , ஒரு தலைப்பட்சமான மத மாற்று சம்பவங்கள் நாட்டில் தொடரவே செய்யுமென , பிரதமர் துறையில் சட்டவிவகாரங்களுக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா கூறியுள்ளார்.
மேலும் , பிள்ளைகள் சார்ந்த விவகாரத்தில் சட்டங்கள் பரிவு மிக்கவையாக இருக்க வேண்டும். இல்லையேல் தாயின் அனுமதியின்றி பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றும் சம்பவங்கள் தொடரும் நிலையில், அவ்விவகாரத்தில் இஸ்லாம் மீது தவறான எண்ணமே விதைக்கப்படுமென முஜாஹிட் யூசோப் ராவா குறிப்பிட்டார்.
மேலும் அவ்விவகாரத்தில் அதிகாரத்துவ தரப்பினரின் போக்கும் மாற வேண்டுமென அவர் கூறினார். இந்திரா காந்தியின் வழக்கிலிருந்து அவர்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்?
லோவின் மூன்று பிள்ளைகளின் மத மாற்றம் பெர்லிஸ் சட்டவிதிகளின் படி முறையானதே என அம்மாநில இஸ்லாமிய சமயத் தலைவர் கூறியிருந்ததை அடுத்து முஜாஹிட் அவ்வாறு கருத்துரைத்துள்ளார்.