Latestமலேசியா

இந்திரா காந்தியைப் போன்று மீண்டும் ஒரு தலைபட்சமான மதமாற்ற சம்பவமா ? 

கோலாலம்பூர், பிப் 13  – நாட்டில் ஒரு தலைப்பட்சமான மத மாற்றத்தால், இன்று வரை  தனது மகளை காண முடியாமல் தவிக்கும்  தாய்  இந்திரா காந்தியின்  போராட்டத்தை நாம் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் மறுபடியும் அத்தகைய ஒரு  பிரச்சனையில்,  விவாகரத்து பெற்ற மற்றொரு  பெண்ணும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென,  பினாங்கு துணை முதலமைச்சர்  டாக்டர் பி. ராமசாமி கூறியுள்ளார்.

நேற்று  பினாங்கு, கெபால்லா பத்தாஸைச் சேர்ந்த  34 வயதான Loh Siew Hong,   அனுமதியின்றி தனது 3 பிள்ளைகளை பெர்லிசில் உள்ள  சமய அதிகாரத்துவ தரப்பினர்  வைத்திருப்பதாக போலீஸ் புகார் செய்திருந்தார்.

குடும்ப  வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த  பண்,  அமைப்பொன்றின் அடைக்கலத்தை பெற்றிருந்தார்.  பின்னர் அந்த  பாதுகாப்பு அமைப்பிலிருந்து வெளியேறி தனது கணவரிடமிருந்து அவர் விவாகரத்துப் பெற்றார்.

அதையடுத்து  தனது   14 வயதுடைய இரட்டை  பெண் பிள்ளைகள், 10 வயது மகன் ஆகியோரைத்  தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.  அப்போது,  தனது பிள்ளைகள்,  பெர்லிசில் சமய அதிகாரத்துவ தரப்பின் பராமரிப்பில் இருப்பதாக கிடைத்த தகவலால் அந்த பெண் அதிர்ச்சியுற்றார். அத்துடன்  இந்துக்களான தனது பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டிருக்கலாமென  ஐயுறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதையடுத்து,  முஸ்லீம் மதத்திற்கு மாறிய கணவரை விவாகரத்து செய்த பின்னர் , இந்திரா காந்திக்கு நேர்ந்த அதே  நிலை,  தற்போது Loh Siew Hong-கிற்கும் ஏற்பட்டிருப்பதாக பி. ராமசாமி கூறினார்.

Loh – வின் பிள்ளைகள் கடத்தப்பட்டு , முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்பட்டு ,  சமய அதிகாரத்துவ தரப்பின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தால், அது கடத்தல் விவகாரமாகும்.  எனவே, அவ்விவகாரத்தில்  உண்மை விஷயத்தை அறிந்து போலீசார் உடனடி நடவடிக்கை  எடுக்குமாறு  பி. ராமசாமி கேட்டுக் கொண்டார்.

வயது குறைந்த பிள்ளைகளை தாய் தந்தை  இருவரின் அனுமதியின்றி மதமாற்றம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!