
மும்பை , மே 23 – பிரபல இந்தி நடிகரும் model லுமான Aditya Sing Rajput மர்மமான முறையில் மும்பையிலுள்ள Andheri வட்டாரத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 11 ஆவது மாடியிலுள்ள தமது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 32 வயதான அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. உடற்கூறு பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலமின்றி இருந்ததாகவும் நேற்று பிற்பகலில் தமது வீட்டின் குளியல் அறையில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் அவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது.