Latestமலேசியா

இந்துக்களை ஹலிமா ஏமாற்றிவிட்டார் – டாக்டர் ராமசாமி

கோலாலம்பூர், ஜன 14 – தைப்பூசத்திற்கான SOP விவகாரத்தில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் Halimah Sadique உண்மையாக நடந்துகொள்ளவில்லை. இந்த விவகாரகத்தில் அவர் இந்துக்களை ஏமாற்றி விட்டார் அல்லது இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார் என பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் ராமசாமி தெரிவித்தார். தைப்பூசத்திற்கான SOP விவகாரத்தில் தாம் வழங்கிய வாக்குறுதிபடி ஹலிமா நடந்துகொள்ளவில்லை என நான் குறைகூறிய பின் அதற்கு பதில் அளித்த அவர் வெவ்வேறு மாநிலங்களின் ஆலய நிர்வாகங்கள் மற்றும் சுகாதார தேவைகளுக்கு ஏற்பவே SOP க்கள் அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது ஏற்புடையதாக இல்லயென பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைன் தலைவருமான ராமசாமி தெரிவித்தார்.

வெவ்வேறு ஆலய நிர்வாகங்களுடன் ஹலிமா நடத்திய சந்திப்பின் வெளிப்பாடு அல்லது அதன் பயன் எதுவும் அவரது SOP க்கள் அறிவிப்பில் பிரதிபலிக்கவில்லை என்பதையும் ராமசாமி சுட்டிக்காட்டினார். தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்தினருடன் ஹலிமா சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில் ரதம் ஊர்வலத்தின்போது 500 பக்தர்களை அனுமதிக்கலாம் என ஆலய நிர்வாகத்தின்ர் ஆலோசனை தெரிவித்தபோது ரதத்துடன் உடன்செல்ல 1,000 பக்தர்கள்வரை அனுமதிக்கலாம் என ஹலிமா முன்வந்தார். ஆனால் இப்போது 100பேரை செல்வதற்கு மட்டுமே ரத ஊர்வலத்தின் அனுமதிக்க முடியும் என அவர் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என தமது முகநூலில் டாக்டர் ராமசாமி பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!