கோலாலம்பூர், ஆகஸ்ட்-12 – வங்காளதேசத்தில் Sheikh Hasina-வின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது தொடர்சியாக தாக்குதல்கள் நடத்தப்படு பலரும் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் இது தொடர்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வங்காளதேச இடைக்கால அரசு அங்கு வன்முறை அத்துமீறல்களை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் எனவும் ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எந்த நாடானாலும் சிறும்பான்பையினர் பெரும்பான்பையினர் பாகுபாடினின்றி சமய பேதமின்றி அனைவரின் பாதுகாப்பு, வழிபாட்டுத் தளங்கள், உடைமைகள் உறுதி செய்யப்படுவது அவசியம். இந்த நிலையில்தான் மலேசியா பல்வேறு தருணங்களில் பல நாடுகளில் நிலவும் இது போன்ற தாக்குதல்களின் போது அனைத்துலக அரங்கில் குரல் கொடுத்துள்ளது.
அதே அடிப்படையில் வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் தற்போதைய தாக்குதல்கள் விவகாரத்தில் மலேசியா பெரும் வருத்தத்தையும் அக்கறையையும் கொண்டிருப்பதை பிரதமர் அன்வார் அந்நாட்டு அரசாங்கத்திடம் பிரதிபலிக்க வேண்டும் என விக்னேஸ்வரன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
ஆகையால் Muhammed Yunos கீழ் இயங்கும் தற்போதைய இடைக்கால அரசிடம் நேரடியாகவோ மலேசியாவில் உள்ள அந்நாட்டு தூதரகம் வழியோ அன்வார் மலேசியாவின் மத அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான கண்டனத்தை உறுதியோடு முன் வைக்க வேண்டும் என முன்னாள் மேலவை தலைவருமான விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
வங்காளதேசத்தில் நிலவும் தற்போதைய கலவரங்கள் விரைவில் முடிவுக்கு வந்து சிறும்பான்பையினர் உட்பட அந்நாட்டு மக்கள் அனைவரும் அமைதியான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் விக்னேஸ்வரன் தமது எதிர்ப்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.