Latestமலேசியா

இந்து அறப்பணி வாரியத்தின் மீது கணக்குத் தணிக்கை; குளறுபடிகள் தொடர்பாக MACC-யில் புகார்

பினாங்கு, ஆக 27 – பினாங்கு இந்து அறப்பணி வாரிய முன்னாள் நிர்வாகத்தின் கண்கறிக்கையின் மீது forensic audit செய்யப்பட்டதில் அதில் ஒரு தவறுகள் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளார் அதன் தற்போதைய தலைவர் RSN ராயர்.

தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களுடனான பொது சந்திப்பில் அவர்கள் முன்வைத்த அதிருப்தியைத் தொடர்ந்து இந்து அறப்பணி வாரியத்தின் மீது உள்தனிக்கை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதில் சில குளருபடிகள் இருந்ததால், மறு உறுதி படுத்த forensic audit அதாவது நிதிநிலை கணக்காய்வு ஒன்று அங்கீரிக்கப்பட்ட கணக்கு தனிக்கை நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் forensic audit நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியாகிவிட்டதாக இன்று புதிய நிர்வாகத்தினர் கூறினர்.

அதில், சில தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக இன்று நடத்தப்பட்ட சந்திப்பில் RSN ராயர் தெரிவித்தார். எனினும் அது என்ன என்பதை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனும் நோக்கில் பினாங்கு ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகாரும் இன்று அளிக்கப்பட்டது.

இன்றைய சந்திப்பில் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ராஜு, செனட்டர் லிங்கேஸ்வரன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் கீழ் செயல்பட்டு வந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம், அவர் கட்சியிலிருந்து விளகியப்பின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தலைமையில் கடந்தாண்டு செயல்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!