Latestமலேசியா

இந்து ஆலயங்களின் பராமரிப்புக்கு மடானி அரசாங்கம் 2023 & 2024-ல் ஆண்டுக்கு RM10 மில்லியன் மேற்பட்ட தொகை ஒதுக்கீடு

கோலாலம்பூர், ஆக 7 -சபா, சரவா உட்பட நாடு முழுவதிலும் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களின் பராமரிப்பு, சீரமைப்பு , புனரமைப்பு செலவுகளுக்காக மாடானி அரசாங்கம் கடந்த 2023 ஆம் ஆண்டு 50 மில்லியன் ரிங்கிட்டும், 2024 ஆம் ஆண்டு 50 மில்லியன் ரிங்கிட்டும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சுக்கு ஒதுக்கியது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தை தொடர்ந்து நிலைநாட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமியர் அல்லாத 205 வழிபாட்டு தலங்களுக்கு 2கோடியே 47 லட்சத்து,67,257 ரிங்கிட் 20 சென் வதுங்கப்பட்டது. இவற்றில் இந்து கோயில்களுக்கும் மட்டும் 1 கோடியே 10 லட்சத்து 12,409 ரிங்கிட 59 சென் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மோ மாதம் 31ஆம் தேதிவரை நாட்டிலுள்ள முஸ்லீம் அல்லாத 240 வழிபாட்டு தலங்களுக்கு 2 கோடியே 58 லட்சத்து 28,921 ரிங்கிட் ,61 சென் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் இந்துக் கோயில்களின் பராமரிப்பு ப்பு மற்றும் , புனரமைப்பு நடவடிக்கைக்காக ஒரு கோடியே 46 லட்சத்து 3,140 ரிங்கிட் 70 சென் வழங்கப்பட்டுள்ளதாக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம் வாய்மொழியாக எழுப்பிய கேள்விக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் ( Nga Kor Ming) பதில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கான பராமரிப்பு, சீரமைப்பு மற்ற புனரமைப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து செனட்டர் லிங்கேஸ்வரன் மேலவையில் கேள்வி எழுப்பியிருந்தார். கிறிஸ்துவ தேவாயங்கள், சீக்கிய சமயம் மற்றும் பௌத்த சமய வழிபாட்டு தலங்களும் இந்த நிதியுதவியை பெற்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!