Latestமலேசியா

இந்து ஒருவரை மதம் மாற்றம் செய்த அன்வாரின் நடவடிக்கையை குறைகூறிய அருண் துரைசாமியிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஆக 23- அண்மையில் கிள்ளானிலுள்ள பள்ளி வாசலில் இந்து ஒருவரை மதம் மாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நடவடிக்கையை குறைகூறியதோடு அது குறித்து கேள்வி எழுப்பிய அருண் துரைசாமியை புக்கிட் அமான் போலீசார் மூன்று சட்டத்தின் கீழ் விசாரணை செய்தனர். நாட்டின் பிரதமராக இருக்கும் அன்வார் ஒருவரை மதமாற்றம் செய்தது பொருத்தமானதாக இல்லையென அருண் துரைசாமி வெளியிட்ட காணொளி ஒன்றில் கூறியிருந்தார். பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதற்கு தூண்டியது மற்றும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் மலேசிய தொடர்பு , பல்லூடக வாரிய சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் இணைய வசதிகளை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 504ஆவது விதியின் கீழ் அருண் துரைசாமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மேலும் சிறு குற்றங்கள் சட்டத்தின் 14ஆவது விதியின் கீழ் சிறுமைப்படுத்தியது தொடர்பாகவும் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகிறது. மேல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விவகாரம் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என அருண் துரைசாமியுடன் புக்கிட் அமானுக்கு சென்ற அவரது வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தை சேர்ந்த ஆடவர் ஒருவர் இஸ்லாமிய சமயத்தை தழுவும் உரிமையை தாம் கேள்வி எழுப்பவில்லை என்றும் ஆனால் நாட்டின் பிரதமரான அன்வாரின் செயல் குறிப்பாக மலேசிய இந்தியர்களிடையே ஏமாற்றத்தையும் உணர்சிவசப்படச் செய்துள்ளதாக தாம் தமிழ் மொழியில் பேசி வெளியிட்ட காணொளியில் அருண் துரைசாமி கூறியிருந்தார். அண்மையில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் மலாய்க்காரர்களின் ஆதரவை அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இழந்ததை தொடர்ந்து Stunt ஏற்படுத்தும் வகையில் அவரது மத மாற்ற நடவடிக்கை அமைத்திருப்தாகவும் அருண் துரைசாமி அந்த காணொளியில் தெரிவித்திருந்தார். தேர்தல் முடிந்துவிட்டதால் இனி பொருளாதாரத்தை மேம்படுத்தி , அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, பொருட்களின் விலைகளை குறைத்து அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைப்பதற்கான செயல்களில் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அந்த காணொளியில் அருண் துரைசாமி கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனிடையே இம்மாதம் 18 ஆம் தேதி அரசு சார்பற்ற இயக்கத்தின் தலைவருமான அருன் துரைசாமி தமது முகநூலில் நாட்டின் 10ஆவது பிரதமர் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்தியதை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ Mohd Suhaily bin Mohd Zain வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு இந்த விவகாரம் தொடர்பில் இன்னமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் இது தொடர்பாக பொதுமக்கள் ஆருடங்கள் கூறுவதையோ அல்லது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கும்படியும் Mohd Zaid கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!