மனாடோ, ஏப்ரல்-30 – இந்தோனீசியா, வட சுலாவேசி தீவில் உள்ள Ruang எரிமலை இன்று காலை மீண்டும் வெடித்து, வானில் சுமார் 5 கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்புகையைக் கக்கியது.
இப்புதிய வெடிப்பால், எரிமலைப் பகுதியில் இருந்து 100 kmர தொலைவில், தலைநகர் மனாடோவில் உள்ள Sam Ratulangi அனைத்துலக விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது.
6 கிலோர் மீட்டர் தூரம் வரை மக்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி, அருகாமையில் உள்ள மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், வெளியேற்றப்பட்டோரின் மொத்த எண்ணிக்கைக் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
இன்று காலை முதல் வைரலான காணொலிகளில், ருவாங் எரிமலையில் இருந்து ரத்தச் சிவப்பில் குழம்புகள் பாய்ந்தோடுவதைக் காண முடிந்தது.
இம்மாதத் தொடக்கத்தில் ருவாங் எரிமலை முதன் முறையாக வெடித்துச் சிதறிய போது, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெடித்திச் சிதறியப் எரிமலைப் பாறைகள் விழுந்தும் சாம்பல்கள் பட்டும் குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன; அருகில் உள்ள மருத்துவனைக் கூட உடனடியாக காலிச்செய்யப்பட்டது.
அந்த முதல் வெடிப்புக்குப் பிறக்கு எச்சரிக்கை அளவை 3-க்கு குறைத்த அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் , இன்று காலை மீண்டும் அதனை 4-க்கு உயர்த்தியிருக்கிறது.