புத்ராஜெயா, ஏப்ரல்-30 – ஆறாண்டுகளுக்கு முன் தனது இந்தோனேசியக் காதலியை 28 முறை கத்தியால் குத்திக் கொலைச் செய்த கட்டுமான நிறுவனமொன்றின் முன்னாள் மேலாளர், மரண தண்டனையில் இருந்துத் தப்பியுள்ளார்.
Sobri Abdul Wahab எனும் அவ்வாடவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.
46 வயது அந்நபருக்குக் கூடுதலாக 12 பிரம்படிகள் விதிக்கவும் நீதிபதிகள் ஏகமனதாக முடிவெடுத்தனர்.
Sobri கைதான நாளான 2018, மார்ச் 10-ல் இருந்து சிறைத்தண்டனைக் காலம் தொடங்கும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தாம் குற்றமிழைத்ததாகக் கூறி Shah Alam உயர்நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி Sobri முன்னதாக மேமுறையீடு செய்திருந்தார்.
அதனை இன்று நிராகரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்றும், சம்பவத்தின் போது Sobri சரியான மனநிலையில் இல்லை என்ற வாதம் நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பில் விளக்கியது.
எனவே, அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டது நிலைநிறுத்தப்படுகிறது; என்றாலும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
தன்னைத் திருமணம் செய்துக் கொள்ளுமாறு விடாது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்ததால் பொறுமையிழந்து, 2018, மார்ச் 10-ஆம் தேதி Sobri தனது காதலியைப் படுகொலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.