கோலாலம்பூர், பிப் 20 – தேசிய ஆடவர் பூப்பந்து அணியினர் முதல் முறையாக, ஆசிய குழு நிலையிலான பூப்பந்து போட்டியில் ( BATC ) வாகை சூடியிருக்கின்றனர். அதன் வாயிலாக, அப்போட்டியில் இந்தோனேசியாவின் ஆதிக்கத்தை அவர்கள் முறியடித்திருக்கின்றனர்.
ஷா ஆலாமில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் தேசிய அணியினர் நடப்பு வெற்றியாளரான இந்தோனேசிய அணியினரை 3-0 எனும் புள்ளிகளில் வீழ்த்தினர்.
ஒற்றையர் ஆட்டக்காரர் லீ சி ஜியா ( Lee Zee Jia), இரட்டையர் ஆட்டக்காரர்கள் ஏரன் ஜியா-சோ வூய் யிக் ( Aaron Chia- Soh Wooi Yik) , மற்றுமோர் ஒற்றையர் ஆட்டக்காரர் ங் சி யொங் ( Nh Tze Yong) ஆகியோர் நாட்டின் அந்த மூன்று புள்ளிகளையும் பெற்றுத் தந்தனர்.