
கோலாலம்பூர். செப்.23- இந்தோனேசியா, பாலியில் அண்மயில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களுடன் 2 சிறப்பு விருதுகளைளையும் வென்று பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை தேடித்தந்தனர். கொரியா, எகிப்து, தாய்லாந்து மலேசியா உட்பட 10 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. செமினி தினேஷா ஜெயபிரகாசம், திவாஷினி எல்.ஜெயபாலன், வேலன் சிவகுமார், ஆஷ்ரி குமரேசன், லெனிஷா ரவிசந்திரன், தாரணி மோகன், தனுஸ்ரீ ஜெயசீலன், கிஷோர் ஜெயசீலன், தருணேஷ் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டதாக செமினி தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் குப்புசாமி தெரிவித்தார்.
மாணவர்கள் இப்போட்டிக்கு 3 அறிவியல் தொழில்நுட்பப் படைப்புகளை படைத்தனர். உலர்ந்த இலைகளைக் கொண்ட தாள் தயாரித்தல், மழையில் துணிகள் நனைவதைத் தடுக்கும் கருவி, அடுத்ததாக குப்பைமேனி கீரையைக் கொண்டு மிட்டாய் தயாரித்தல் ஆகியவை ஆகும்.
இப்போட்டிக்கு மொத்தம் 9 மாணவர்களைத் தயாரித்து வழிநடத்திய ஆசிரியர்கள் திருமதி உமா தேவி, திருமதி ஷாமினி, திருமதி ராஜம்மாள் அவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நெடுஞ்செழியன் தெரிவித்துக் கொண்டார். இப்போட்டிக்கு இம்மாணவர்களை முன்நின்று கலந்து கொள்வதற்கு உதவிய பள்ளியின் முன்னாள் நிர்வாகத் துணைத் தலைமை ஆசிரியை திருமதி சுந்தரி, விரிவுரையாளர் திருமதி தங்கேஸ்வரி, டாக்டர் உமையாள் ஆகியோருக்கு பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இப்போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயபாலன், துணைத் தலைவர் சரண்பாபு ஆகியோருக்கும் பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் ஜோன்சன், அவர்தம் செயலவை உறுப்பினர்கள், பெற்றோர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தனியார் இயக்கங்களுக்கும் பள்ளியின் சார்பில் நெடுஞ்செழயன் தெரிவித்துக் கொண்டார்.