
ஜகார்த்தா, நவ 17 – இந்தோனேசியாவில் மலைப் பகுதி வட்டாரத்தில் ராணுவத்தின் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்ததாக விமானப்டையின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.Embraer Super Tucano வகையைச் சேர்ந்த அந்த இரு விமானங்களும் நேற்று காலையில் ஜாவா திமூரில் மாலாங்கிலிருந்து புறப்பட்ட அரைமணி நேரத்திற்குப் பின் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தன. வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த விமானங்கள் விபத்துக்குள்ளானதில் மாண்ட இரு விமானிகள் மற்றும் அவர்களது இரு உதவியாளர்களின் உடல்கள் ஜாவா திமூரில் புரோமோ மலைப்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.