Latestஉலகம்

இந்தோனேசியாவில் மனைவியை கொன்று உடலை கண்டம் துண்டமாக வெட்டி அண்டை வீட்டாருக்கு வழங்கிய ஆடவன் கைது

ஜகர்த்தா, மே 5 – இந்தோனேசியாவில் தனது மனைவியை கொன்று அவரது உடலை கண்டம் துண்டமாக வெட்டி அந்த உடல் பகுதியை கூறுபோட்டு அண்டை அயலாருக்கு வழங்கிய மனிதாபிமானமற்ற ஆடவனை போலீசார் கைது செய்தனர். மேற்கு ஜாவாவில் Dusun Sindangjaya என்ற இடத்திலுள்ள அந்த ஆடவனின் வீட்டில் இந்த கொடுரமான சம்பவம் நேற்று நடந்தது. தனது 40 வயது மனைவியான Yanti யை கொலை செய்தபின் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை கூறுபோட்டு ஒரு மூட்டையாக கட்டி அண்டைவீட்டுக்காரர்களிடம் வழங்க முன்வந்தபோது 41 வயதுடைய Tarsum என்பவன் கைது செய்யப்பட்டான்.

ஒரு மூட்டையில் போடப்பட்ட மனித இறைச்சியை தம்மிடமும் அந்த நபர் வழங்க முன்வந்ததாக கிராமத் தலைவரான Yoyo Tarya வும் கூறினார். முதலில் அந்த ஆடவன் அவனது மனைவியை கொலை செய்துள்ளான் என்பது தமக்கு தெரியாது என்றும் பிறகு மனைவியின் இறைச்சியை வைத்திருப்பதாக மனநோயாளிப்போல் அவனாகவே கூறிக்கொண்ட பிறகுதான் இதனை அறிந்து போலிசிற்கு தகவல் கொடுத்ததாக Yoyo Tarya தெரிவித்தார்.

இதனிடையே அந்த ஆடவன் தனது மனைவியை முதலில் கட்டையினால் அடித்து கொன்றவுடன் சாலையின் நடுவிலேயே அவரது உடலை துண்டு துண்டாக வெட்டினான் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் நிகழ்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆடுகளை விற்பனை செய்துவரும் அந்த ஆடவன் கடும் கடன் சுமையினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!