
போகோர், ஜன 9 – மலேசியாவில் வேலை செய்யும் இந்தோனேசிய தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படுமென, மலேசிய அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் உறுதியளித்திருக்கின்றார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பாதிக்கக் கூடிய விவகாரங்களை தவிர்க்கவும் மலேசியா நடவடிக்கைகளை எடுக்குமென அவர் கூறினார்.
மேலும், இந்தோனேசிய தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனங்களும் அமைப்புகளும் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள அன்வார், அதிபர் ஜோகோ விடோடோவுடன் இணைந்து வெளியிட்டு கூட்டறிக்கையில் அந்த உறுதியை அன்வார் வழங்கியிருக்கின்றார்.