
கோலாலம்பூர், பிப் 12 – Mummy எனப்படும் இந்தோனேசிய பெண் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த மிகப் பெரிய விபச்சாரக் கும்பல் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் குடிநுழைவுத்துறை மேற்கொள்ளபட்ட சோதனை நடவடிக்கையில் முறியடிக்கப்பட்டது. மூன்று பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பரிமாற்ற வீடுகளாக செயல்பட்ட இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் Khairul Dzaimee Daud தெரிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கையின்போது 27 இந்தோனேசியப் பெண்கள், இரண்டு வியட்னாமிய பெண்கள், மற்றும் தாய்லாந்து சேர்ந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த பெண்களை கண்காணித்து வந்த உள்நாட்டைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக Khairul Dzaimee கூறினார்.