Latestமலேசியா

இந்தோனேசிய போலீஸ் நிலையத்தில் தற்கொலை தாக்குதல் இருவர் மரணம்

ஜகர்த்தா, டிச 7 – போலீஸ் நிலையத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த தீவிரவாதி ஒருவன் சொந்தமாக குண்டை வெடிக்கச் செய்ததில் அந்த நபர் உட்பட இருவர் மாண்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். Bandung நகரிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் இதர எண்மர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் போலீஸ் அதிகாரி என அடையாளம் கூறப்பட்டது . து. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பயங்கரவாத துடைத்தொழிப்பு பிரிவுடன் Bandung போலீஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தேசிய போலீஸ் படையின் தகவல் பிரிவு தலைவர் Ahmad Ramadhan தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு ஐ .எஸ் ஆதரவிலான தீவிராத இயக்கம் பின்னணியாக இருந்துள்ளதாக இந்தோனேசிய பயங்கரவாத துடைத்தொழிப்பு நிறுவனத்தை சேர்ந்த Ibnu Suhendra தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!