கோலாலம்பூர், பிப் 11 – இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்களைத் தருவிக்கும் விவகாரத்தில், தாமும், உள்துறை அமைச்சர் Dato Seri Hamzah Zainuddin -னும் ஒரே நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். இந்தோனேசியத் தொழிலாளர்களின் நலன் பேணப்படும் நோக்கத்தையே இரு தரப்பினரும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் காரணமாகவே, இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான கருத்திணக்க உடன்பாட்டினை விரைந்து கையெழுத்தாவதற்கு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக, டத்தோ ஶ்ரீ எம், சரவணன் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
முன்னதாக , இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்கள் விவகாரத்தில் டத்தோ ஶ்ரீ ஹம்சா சய்னூடினும், டத்தோ ஶ்ரீ எம். சரவணனும் இரு வேறு நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாக, இந்தோனேசிய தூதர் கூறியிருப்பதாக உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.