Latestமலேசியா

இந்த வாரம் கோவிட் தொற்று பரவல் குறைந்துள்ளது

கோலாலம்பூர், ஆக 13 – இம்மாதம் ஆறாம் தேதி தொடங்கி நேற்று வரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் COVIDNOW அகப்பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதிலும் 28 ,000த்திற்கு மேற்பட்டோர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை இந்த வாரம்
27,028 ஆக குறைந்துள்ளது. அதோடு தினசரி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 5,000 பேருக்கு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதிலும் 61 பேர் கோவிட் தொற்றினால் மரணம் அடைந்தனர். இதன்வழி நாட்டில் கோவிட் தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 36,070 ஆக உயர்ந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!