Latestமலேசியா

இனங்களின் ஐக்கியத்திற்கு முக்கிமாக திகழும் ஒற்றுமையினால் நாட்டு மக்கள் நலம் பெறுவர் பேரரசர் நம்பிக்கை

கோலாலம்பூர், ஆக 31 – ஐக்கியத்திற்கு முக்கிய அடிப்படையாக திகழும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மூலம் நாடு மற்றும் மக்கள் நலம் பெறுவார்கள் என மாட்சிமை தங்கிய பேரரசர் AL Sultan Abdullah தெரிவித்துள்ளார். மலேசியா மடானி : உறுதியான ஒற்றுமை ,மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் என இவ்வாண்டின் தேசிய தின கருப்பொருளுக்கு ஏற்ப ஐக்கியமும், இனங்களுக்டையிலான ஒற்றுமையும் திகழ்வதாக இனறு இஸ்தானா நெகாரவின் முகநூலில் வெளியிட்ட பதிவில் Al Sultan Abdullah தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைத்தன்மைக்கும் சுபிட்சத்திற்கும் முக்கிய அடிப்படையாக வலுவான ஒற்றுமை திகழ்வதாகவும் நடப்பு மற்றும் எதிர்கால சவால்களை எதிர்நோக்குவதற்கு விதையாகவும் ஒருமைப்பாடு திகழ்வதாக
அவர் சுட்டிக்காட்டினார்.

60 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மீதான நேசமும் , தேசப்பற்றும்தான் சுதந்திரம் அடைவதற்கான உறுதியையும் , அர்ப்பணிப்பையும்,தியாகத்தையும் மக்களிடையே விதைத்ததாக பேரரசர் நினைவு கூர்ந்தார். நாட்டின் சுதற்திரத்திற்காக போராடிய தலைவர்கள் மற்றும் வீரர்களின் தியாகங்களையும் சேவைகளையும் மக்கள் என்றும் நினைவு கூறி பாராட்டவேண்டும் என Al Sultan Abdullah கேட்டுக்கொண்டார். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் பாதுகாப்பு படையினர் சேவையை ஆற்றுவதற்கும் , நாட்டின் சுதந்திரத்திற்காக மக்களின் ஒற்றுமையும் பெரும் பங்காற்றியிருப்பதையும் அவர் தெரிவித்தார். ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் நிலைநாட்டும் கூட்டுப் பொறுப்பை தலைவர்களும் மக்களும் கொண்டிருப்பதாகவும் AL Sultan Abdullah வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!