Latestமலேசியா

இனத்துவேச அறிக்கை வெளியிட்ட பெர்லீஸ் முப்தியையும் விசாரிப்பீர் – டாக்டர் ராமசாமி

கோலாலம்பூர், மார்ச் 3 – தனித்து வாழும் தாய் Loh Siew Hong கின் வயதுக் குறைந்த மூன்று பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட விவகாரத்தில் இனத் துவேச பாணியிலான அறிக்கை வெளியிட்ட பெர்லீஸ் முப்தி Asri Zainul Abidin மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கோரிக்கை விடுத்தார்.

Azri zainul Abidin தான் இந்த விவகாரத்தில் இன மற்றும் சமய உணர்வை தூண்டும் அறிக்கையை வெளியிட்டார் என புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது ராமசாமி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அஸ்ரி திசை திரும்புகிறார் என்றும் அவர் கூறினார்.

Loh Siew Hong கின் வயதுக் குறைந்த பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் பெர்லீஸ் சமய அதிகாரிகளை தொடர்புபடுத்தி டாக்டர் ராமசாமி தமது முகநூலில் இனத்துவேச அறிக்கையை பதிவேற்றம் செய்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் டாக்டர் ராமசாமியிடம் போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். Loh Siew Hong தமது பிள்ளைகளுக்கான பராமரிக்கும் உரிமை பெறுவதற்கான போரட்டத்திற்கு வழக்கறிஞராக செயல்பட்ட Shamsher Sing Thind னும் DAP யின் முன்னணி தலைவருமான டாக்டர் ராமசாமியுடன் புக்கிட் அமான் சென்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!