
பேராக், பாலிமிலுள்ள துரித உணகவம் ஒன்றில், இனத்துவேச வார்த்தைகளை பயன்படுத்திய உள்நாட்டு ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.
அச்சம்பவம் தொடர்பான காணொளி வைரலானதை அடுத்து அந்த 42 வயது ஆடவன் கைதுச் செய்யப்பட்டதாக, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் யாஹாயா ஹசான் தெரிவித்தார்.
முன்னதாக, மே 14-ஆம் தேதி அச்சம்பவம் தொடர்பில் புகார் ஒன்று செய்யப்பட்டதோடு, நேற்றிரவு மணி 11 வாக்கில், அம்பாங் பாருவில் அவன் கைதுச் செய்யப்பட்டதையும் யாஹாயா ஹசான் உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட ஆடவன் கஞ்சா போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
உணவு விநியோகிப்பாளரான ஆடவன் ஒருவன், துரித உணவக பணியாளர்களிடம் இழிவான இனத்துவேச வார்த்தைகளை பேசும், 18 வினாடி காணொளி ஒன்று @nan manjoi8715 எனும் ட்விட்டர் கணக்கில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து, பலர் அதனை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.