கோலாலம்பூர், ஏப் 7 – 3 R எனப்படும் இனம் , சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் கடந்த 2023 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இவ்வாண்டு 123 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தேசிய ஒன்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சமயப் விவகாரங்கள், வெறுப்புணர்வுப் பேச்சு மற்றும் இனத்துவேச பேச்சு உள்ளிட்ட 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 21 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகரித்துள்ளதுதாக ஆரோன் கூறினார். e -Sepakat முறையில் இருந்து இந்த தரவு சேகரிக்கப்பட்டுள்ளது.
இது ஒற்றுமை சிக்கல்களை நிர்வகிப்பதற்கான ஒரு மைய தரவு சேகரிப்பு அமைப்பு மற்றும் சிக்கல்களைக் கண்டறிவது, கண்காணித்தால் மற்றும் இலக்கவியல் விவகாரங்களை அறிக்கையை கொண்ட வழிமுறையாகும என அவர் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை மூலம் கீழ்மட்ட இத்தகைய விவகாரங்களை கண்காணிக்கும் வழிமுறைகளில் ஒன்றாக e- Sepakat தரவுகள் கொண்டுள்ளது.
இன ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வாதங்கள் பற்றிய போலீஸ்துறையின் புள்ளிவிவரங்கள் நாடு முழுவதும் 162 வழக்குகளைக் காட்டுகின்றன, ஜோகூரில் 53 வழக்குகள் உள்ளன, அதைத் தொடர்ந்து சிலாங்கூரில் 34 வழக்குகளும் பினாங்கில் 23 வழக்குகளும் இருப்பதாக ஆரோன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 31 வரை 3ஆர் சிக்கல்கள் தொடர்பான 1,454 இணைய உள்ளடக்கங்களையும் நீக்கியது என்றும் அவர் தெரிவித்தார். அந்த உள்ளடக்கத்தில் 588 இனவாதக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளும், 727 சமயப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளும், 139 அரச அமைப்பு சம்பந்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் ஆரோன் வெளியிட்டார்.