Latestஇந்தியா

இனி இந்தியா, ‘பாரத்’ என்றழைக்கப்படும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புது டெல்லி, அக் 15 – இந்தியாவின் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மன்றம் இனிமேல் வெளியிடப்படும் அனைத்து பள்ளிக்கூட பாடப் புத்தகங்களிலும் இந்தியா என்பதற்கு பதில், பாரத் என குறிப்பிட முடிவெடுத்துள்ளது.

அண்மையக் காலமாகவே, பி.ஜே.பி அரசாங்கம் இந்தியா என்றழைப்பதைவிட பாரத் என அழைக்க உள்நோக்கத்தோடு முடிவெடுத்து செயல்பட்டு வருவதாக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

G20 மாநாட்டின் போது, இந்திய அதிபர் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு தலைவர்களுக்கான விருந்து ஆழைப்பிதழில் பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது, அந்த புள்ளியை நோக்கி நகரும் வகையில் பாடப்புத்தகங்களிலும் இந்தியாவிற்கு பதில் பாரத் என குறிப்பிட எடுக்கப்பட்டிருக்கும் முடிவு அமைவதாக அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!