கோலாலம்பூர், பிப் 22 – இனி MySejahtera பயனீட்டாளர்கள் சுகாதார நிலை குறித்த தங்களது ஆகக்கடைசி விவரங்களை சமர்ப்பிக்கும்போது கோவிட் சுய பரிசோதனையின் முடிவையும் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதற்கு முன் MySejahtera பயனீட்டாளர்கள் கோவிட் சுய பரிசோதனை அறிக்கையில் இலக்கவியல் பாரத்தை அனுப்பும்போது தங்களுக்கு கோவிட் தொற்று இருக்கிறதா இல்லையா அல்லது தங்களது பரிசோதனை செல்லாதது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.
இப்போது கோவிட் சுய பரிசோதனையின் முடிவு குறித்த தகவலை அவர்கள் Snapshot புகைப்படம் எடுத்து, அந்த பரிசோதனை எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் சேர்க்க வேண்டும்.
அதோடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் மக்களுக்கு கோவிட் தொற்றுக்கான அறிகுறியை தெரிந்துகொள்வதற்கு சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார தலைமை இயக்குனர் Dr. Noor Hisham Abdullah பரிந்துரைத்துள்ளார்.