சிங்கப்பூர், பிப் 16 – சிங்கப்பூரில் பறக்கும் டெக்சிகளின் சேவை இன்னும் ஈராண்டுகளில் சேவைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
Volocopter, Skyports இரு நிறுவனங்களும் சேர்ந்து அறிமுகப்படுத்தும் வர்த்தக வான் டெக்சிகள், தொடக்கமாக மரினா பேயிலிருந்து (Marina Bay)செந்தோசாவிற்கு அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்.
அதற்குப் பின்னர், எல்லை கடந்து மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளுக்கு பயணங்களை விரிவுப்படுத்த கூடுமென , ஜெர்மனிய விமான நிறுவனமான Volocopter கூறியுள்ளது.