
சென்னை, ஏப் 25 – அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 2 இன்னும் மூன்று நாட்களில், ஏப்ரல் 28ஆம் திகதி திரையரங்குகளை அலங்கரிக்கவிருக்கிறது.
முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பம் மாதம் வெளிவந்து, மக்களின் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில், பாகம் இரண்டிற்கான ரசிகர்களின் காத்திருப்பிற்கு நல்ல விருந்தாக அமையவிருக்கிறது இத்திரைப்படம்.
வல்லவரையன் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவைப் பிராட்டி, நந்தினி, ஆதித்த கரிகாலன் என இன்னும் பல கதாபாத்திரங்களோடு பொன்னியின் செல்வன் பாகம் 2 எவ்வாறு நகரப்போகிறது, எப்படிப்பட்ட வசூல் செய்யப்பகோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.