Latestமலேசியா

இன்னொரு ஆட்சி கவிழ்ப்புத் திட்டமா சப்ரி மறுப்பு

கோலாலம்பூர், ஜன 4 – 15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பொறுப்பை ஏற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு அவரது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆருடங்கள் வெளியாகியுள்ளன. அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 10,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து லண்டன் நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அம்னோவின் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்துள்ளார்.

கடுமையான வெப்பத்தைக் கொண்ட Abu Dhabi மற்றும் Dhubai-யில் நான் சுற்றுலா மேற்கொண்டேன். நான் லண்டனில் இருந்திருந்தால் குளிர்கால உடையை அல்லவா அணிந்திருக்க வேண்டும் என அவர் வினவினார். கடந்த பொதுத் தேர்தல் முதல் தாம் அமைதியாக இருந்து வருவதாகவும் ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் தம்மை தொடர்புப்படுத்தி வெளியிடப்படும் மற்றொரு அவதூறு தகவல் இதுவாகும் என இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!