
ஜோர்ஜ் டவுன், செப் 18 – இன்று அதிகாலையில் பினாங்கு ஆயர் ஈத்தாம், ஜாலான் கம்பூங் பிசாங்கில் கிராமத்தை சேர்ந்த இரு வீடுகளில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து 60 வயதுடைய மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். . அதிகாலை மணி 3.44 அளவில் தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக அங்கு சென்றடைந்தபோது இரண்டு வீடுகள் எரிந்துகொண்டிருந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அந்த தீ விபத்தில் மாற்றுத் திறாளி ஆடவர் தீயில் கருகி மாண்டதோடு இரண்டு வீடுகளும் 90 விழுக்காடு சேதம் அடைந்தன.