
இன்று காலை ஏழு மாநிலங்களில், இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
சிலாங்கூர், புத்ராஜெயா கூட்டரசு பிரதேசம், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அதிகாலை தொடங்கி அடை மழை பெய்யும் என MetMalaysia வானிலை ஆய்வுத் துறை தமது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதனிடையே, சபாவில், கூடாட், தாவாவ், சண்டாகான் ஆகிய பகுதிகளிலும் ; சரவாக்கில் சமராஹான், பெதோங், சரிகை, மூக்கா, பிந்தூலூ, மேரி, லிம்பாங் ஆகிய பகுதிகளிலும் அடை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் சாலை வழுக்கலாக இருக்கும் என்பதால், வாகனமோட்டிகள் கவனமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.