
கோலாலம்பூர், செப் 15 – மலேசியாவைப் பாதுகாக்கும் அமைதி பேரணியை முன்னிட்டு கோலாலம்பூர் பகுதிகளில் சாலைகளை மூடும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார். அதே வேளையில் கம்போங் பாருவில் நடைபெறும் என கூறப்படும் அந்த பேரணியின்போது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.