Latestமலேசியா

இன்று தொடங்கி இம்மாதம் 28ஆம் தேதிவரை தேசிய பயிற்சி வாரம் ஏற்பாடு செயயப்பட்டுள்ளது

புத்ராஜெயா, மே 23- கற்றல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஒரே நேரத்தில் வழங்குவதற்காக இன்று மே 23 ஆம் தேதி முதல் 28 மே ஆம் தேதி வரை தேசிய பயிற்சி வாரம் (National Training Week) தொடங்குவதில் மனித வள அமைச்சு பெருமிதம் கொள்கிறது என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 125,000 பங்கேற்பாளர்கள், 5000 பயிற்றுனர்களை உள்ளடக்கிய இந்த தேசிய பயிற்சி வாரத்தில் பங்கேற்பார்கள், அவர்கள் 10,000த்திற்கும் மேற்பட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வார்கள் . முதல் முறையாக தேசிய பயிற்சி வாரம் 2023 என்பது நாடு தழுவிய பயிற்சி மற்றும் செயல்பாடுகளின் வாரமாகும்.

அனைத்து மலேசியர்களுக்கும் இலவசமாகவும், TVET அடிப்படையில் தொழில் சார்ந்ததாகவும் அமையும் இந்த பயிற்சிகளை மனிதவள அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக மனித வள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp), உயர்கல்வி அமைச்சகம், மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் , தனிநபர்கள், தொழில் சங்கங்கள், கல்வியாளர்கள் போன்ற பிற அமைச்சகங்களின் ஆதரவுடன் இப்பயிற்சிகள் நடத்தப்படுகிறது. “நாட்டின் நிலையான மற்றும் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதில் மனித மூலதனம் மிக முக்கியமான வளமாகும் என்று சிவகுமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!