சுபாங் ஜெயா, டிசம்பர்-22, இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுத் தேர்தல் நடந்தால் ஒற்றுமை அரசாங்கமே வெற்றிப் பெறுமென பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சீரான பொருளாதார நிர்வாகத்திற்கு தமதரசு முக்கியத்துவம் கொடுப்பதே, அந்நம்பிக்கைக்குக் காரணம் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இவ்வேளையில் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட மடானி அரசாங்கத்தின் அடைவுநிலை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டுமென அவர் சொன்னார்.
சில அமைச்சர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர்; இன்னும் சிலரின் அடைவுநிலை நடுத்தர அளவிலேயே உள்ளது.
ஆனால் பொதுவில் தாம் திருப்தியடைவதாக பிரதமர் சொன்னார்.
ஒன்று மட்டும் நிச்சயம் – அமைச்சர்கள் மத்தியில் லஞ்ச ஊழலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றார் அவர்.
அரசாங்க குத்தகைகளை திறந்த டெண்டர் முறையில் விடாமல், நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கி கமிஷன் பார்ப்பதும் அதிலடங்கும்.
இவ்வேளையில் சீர்திருத்தங்களை வெறும் ஓராண்டில் ஈராண்டுகளிலோ கொண்டு வந்து விட முடியாது;
படிப்படியாக முறைப்படி அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
உதாரணத்ற்கு தேசிய சட்டத் துறைத் தலைவர் மற்றும் அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்களின் அதிகாரத்தைப் பிரிப்பது எளிதான காரியம் அல்ல.
அதில் அரசாங்கம் உரிய கவனத்தோடு செயல்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஸ்ரீ அன்வார் மேற்கண்ட விவரங்களை வழங்கினார்.