
கோலாலம்பூர், டிச 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை தமது அமைச்சரவை பட்டியலை அறிவிக்கவிருக்கிறார். அமைச்சரவை அறிவிப்பு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் . புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் டிசம்பர் 5ஆம்தேதி திங்கட்கிழமை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என அன்வார் தெரிவித்தார். சிக்கனத்தோடு அமைச்சரவையை எப்படி நிர்வகிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அன்வார் கூறினார்.