Latestமலேசியா

இன்று முதல் குறிப்பிட்ட சாலை அபராதங்களுக்கு கழிவு ; போலீஸ்

கோலாலம்பூர், ஜன 10 – இன்று தொடங்கி 3 நாட்களுக்கு குறிப்பிட்ட போக்குவரத்து அபராதங்களுக்கான , 50 விழுக்காடு வரையிலான கழிவை போலீஸ் துறை வழங்குகிறது.

தலைநகர் , Jalan Tun H. S Lee- யில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நேரடியாக அபராதத்தை செலுத்த வருபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுமென, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை –அமலாக்க துறையின் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்துடன், MyBayar செயலியின் மூலமாக , அபராதத்தை செலுத்த விரும்புபவர்கள் , கழிவைப் பெற , சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு வந்து barcode குறியீட்டை scan செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!