கோலாலம்பூர், ஏப் 8 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது முழு சூரிய கிரகணம் இன்று ஏப்ரல் 8ஆம்தேதி ஏற்படுகிறது. இது சூரியனின் முகத்தை முற்றிலுமாக மறைக்கிறது, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மலேசியா உட்பட உலகின் பல நாடுகளில் தெரியாது. நாசாவின் கூற்றுப்படி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவை கடந்து மெக்சிக்கோ, அமெரிக்கா , மற்றும் கனடாவை கடந்து செல்லும். நான்கு நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த முழு சூரிய கிரகணத்தை அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமே முழுமையாக பார்க்க முடியும்.
மலேசியாவில் இந்தக் கிரகணம் தோன்றாது என்பதால், இங்கு நட்சத்திர, தோஷ பலன்களைக் கணிப்பதும் கூறுவதும் பொருத்தமாக இருக்காது. அதனால் இந்தக் கிரகணம் தோன்றும் நேரத்தில் மலேசியாவில் வாழும் இந்திய-இந்து சமுதாய குடும்பங்களில் எந்த பரிகாரமும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட எவரும் அச்சம் கொள்வதும் , வெளியில் வரத் தயங்குவதும் எந்த வகையிலும் கவலையடையத் தேவையில்லை என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரியவித்துள்ளார்.