
சென்னை, ஜன 28 – இன்ஸ்தா ரில்ஸ்-சில் ( Reels) தான் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்த நடன கலைஞர் ரமேஷ் , தனது குடியிருப்பின் 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரமேஷ் சினிமா பாடல்களுக்கு நடனமாடி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்று , ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.
அந்த பிரபலத்தை அடுத்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வந்த அவர், அண்மையில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் நடனம் ஆடியிருந்தார். அடுத்து வெளிவரவிருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடனம் ஆடியுள்ளார் .
இந்த நிலையில், இரு மனைவிகள் இருக்கும் ரமேஷ் ,தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது ரசிகர்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.