Latestமலேசியா

இன துவேசத்தை தூண்டியதாக பாஸ் எம்.பி மீது போலீசில் புகார்

கோலாலம்பூர், ஜன 21 – மலாய்க்காரர் அல்லாதவர்களை சமூக வலைத்தளங்களில் சிறுமைப்படுத்தியதற்காக பாஸ் கட்சியின் Permatang Pauh நாடாளுமன்ற உறுப்பினர் Fawwaz Mohamad Jan – னுக்கு எதிராக பக்காத்தான் ஹராப்பான் Bukit Bendera நாடாளுமன்ற உறுப்பினர் Syerleena Abdul Rashid போலீசில் புகார் செய்துள்ளார். சமூக வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இனத் துவேசம் தொடர்பான அம்சங்கள் அழிக்கப்பட்டு விட்டபோதிலும் இதுபோன்ற அறிக்கைகள் இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

அரசியல் நலனுக்காக தனது ஆதரவாளர்களிடம் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக தனக்கு சொந்தமான சமூக வலைத்தளத்தை Fawwaz ஆயுதமாக பயன்படுத்திவருவதாக Syerleena வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். விரைவில் மாநில தேர்தல் நடைபெறவிருப்பதால் இனங்களுக்கிடையே நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் இப்படி செய்வது இதுவொன்றும் முதல் முறை அல்ல என்றும் Syerleena சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!