
புத்ராஜெயா, மார்ச் 11 – இன -மத விவகாரங்கள் தொடர்பில், அரசாங்க சார்பற்ற அமைப்பான GHRF -உலகளாவிய மனித உரிமை கூட்டமைப்பு , பிரதமர் அலுவகத்திடம் 3 கண்டன அறிக்கைகளை வழங்கியது.
நாட்டில் சில இஸ்லாமிய மத போதகர்களின் அவதூறான கூற்றுகள் தொடர்பில் , நீண்ட காலமாகியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படால இருப்பதைக் கண்டித்து, GHRF கூட்டமைப்பைச் சேரந்த சுமார் 100 பேர் பிரதமர் அலுவலகத்தின் முன் திரண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் அமைதியான முறையில் கூடியிருந்த நிலையில், பிரதமர் நடவடிக்கைக்காக மூன்று அறிக்கைகளில் ஒப்படைக்கப்பட்டதாக, அந்த கூட்டமைப்பின் தலைவர் எஸ். சஷிகுமார் தெரிவித்தார்.
அந்த அறிக்கைகளில் , நாட்டில் மன – இன வெறுப்புச் சட்டத்தை அமல்படுத்தும்படியும், மேல் நடவடிக்கை இல்லை வகைப்படுத்தப்பட்ட போலீஸ் அறிக்கைகளை மறுபரீசீலனை செய்யும்படியும், இஸ்லாத்தை தழுவ முடிவுச் செய்யும் முஸ்லீம் அல்லாதவர்களின் விவகாரங்களை கவனிக்க சிறப்பு அமைப்பை அமைக்கும்படியும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.