Latestமலேசியா

IJN புதிய தலைவராக முன்னாள் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் நியமனம்

கோலாலம்பூர், டிச 13 – முன்னாள் சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, டிசம்பர் 1ஆம் தேதி முதல் தேசிய இதயக் கழகத்தின் (IJN) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத் துறையில் புதிய தலைவரின் ஆளுமை மற்றும் நிர்வாகத் திறன்களும் நோயாளிகளை மையமாகக் கொண்ட கவனிப்புக்கான அவரது அர்ப்பணிப்பின் அனுபவமும், நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றிக்கு ஒரு சொத்தாக இருக்கும் என்று IJN நம்புகிறது.

அவரின் தொலைநோக்கு பார்வை IJNனை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்று தான் நம்புவதாக IJN தலைமை செயல் அதிகாரி டத்தோ டாக்டர் ஐசாய் அசான் அப்துல் ரஹீம் கூறியுள்ளார்.

2019யில் தலைவராகவும், பின் 2006யில் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்த டத்தோ டாக்டர் அப்துல் ரோசாலியின் நீண்டகால பங்களிப்புக்கு நன்றி கூறி, அவருக்குப் பதிலாக நூர் ஹிஷாம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!