
கோலாலம்பூர், ஏப் 3 – இபிஎப் ( EPF ) ஊழியர் சேம நிதியை உத்தரவாதமாக வைத்து சந்தாதாரர்கள் , ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி வங்கியிலிருந்து கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் கணக்கில் குறைந்தபட்சம் 3,000 ரிங்கிட் சேமிப்பு பணத்தை வைத்திருக்கும் 40-லிருந்து 50 வயதுடைய சந்தாதாரர்கள் அந்த விண்ணப்பத்தை செய்ய முடியுமென EPF தெரிவித்தது.
இரண்டாம் கணக்கில் உள்ள தொகையைப் பொருத்து 50,000 ரிங்கிட் வரை சந்தாதாரர் வங்கியிலிருந்து தனிநபர் கடனைப் பெற முடியும்.
தற்போதைக்கு BSN- Bank Simpanan Nasional வங்கியும், MBSB வங்கியும் , 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடு வரையிலான குறைந்த வட்டியில் இந்த கடன் வசதியை வழங்கவிருக்கிறது.
இதனிடையே, 40 வயதுக்கு கீழ்பட்ட சந்தாதாரர்கள் வங்கியிலிருந்து கடன் பெறும் இரண்டாம் கட்ட வசதி குறித்து, விரைவில் அறிவிக்கப்படுமென EPF தெரிவித்துள்ளது.