
கோலாலம்பூர், மார்ச் 10 – தனிநபர் கடனைப் பெற இபிஎப்–பின் இரண்டாவது கணக்கில் உள்ள சேமநிதியை வங்கியிடம் உத்தரவாதமாக வைக்கும் வழிமுறைகளை , அந்த வாரியம் கண்டறிந்து வருகிறது.
அவசர ரொக்க உதவி தேவைப்படுபவர்களுக்கு, அத்தகைய சலுகையை வழங்கும்படி , பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் செய்திருந்த அறிவிப்பை தமது தரப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதாக, இபிஎப் தெரிவித்தது.
அதையடுத்து, அந்த திட்டத்தை செயல்படுத்தும் வழிவகைகளை அவ்வாரியம் ஆராய்ந்து வருவதாகவும் அதன் தொடர்பான மேல் விபரங்கள் பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படுமெனவும் இபிஎப் குறிப்பிட்டது.