
செர்டாங், மார்ச் 16 – புத்ரா ஜெயா MRT 2 சேவையை பயன்படுத்துவோர் இம்மாதம் இறுதிவரை அந்த சேவையில் இலவசமாக பயணம் செய்ய முடியும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார். மக்களின் சுமையை குறைக்கும் செயல்முறை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சலுகை அமைவதாக இன்று செர்டாங்கில் MRT 2 ஆவது கட்ட பயணச் சேவையை தொடக்கிவைத்தபோது அவர் தெரிவித்தார். இந்த சேவையை பயன்படுத்தும் பயனர்களுக்கு இன்று மாலை மூன்று மணி தொடங்கி இம்மாத இறுதிவரை நாங்கள் கட்டணம் விதிக்க மாட்டோம் என அன்வார் கூறினார். சுற்றுப்பயணிகளும் இந்த இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் கூறினார்.