Latestமலேசியா

மூன்று மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது

கோலாலம்பூர், டிச 26 –  கிளந்தான், திரெங்கானு, பஹாங் ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு வரை நான்கு மாநிலத்திலுள்ள 199 நிவாரண மையங்களுக்கு 18, 735 பேர் வெளியேற்றப்பட்டனர். நேற்று நள்ளிரவு வரை கிளந்தானில் மட்டும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 3,444 குடும்பங்களைச் சேர்ந்த 11,216 பேர் 72 நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கிளந்தான் மாநிலத்தில் குவா முசாங், ஜெலி, கோலா கிராய், மச்சாங், பாசிர் மாஸ் மற்றும் தானா மேரா ஆகிய ஆறு மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பாசிர் மாஸ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்தார்.

திரெங்கானுவில் 1,791 குடும்பங்களைச் சேர்ந்த 6,724 பேர் பெசுட், டுங்குன், உலு திரெங்கானு, கெமாமன், குவாலா திரெங்கானு, மாராங், செத்தியு ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து 110 நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பஹாங்கில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 791 பேர் லிபிஸ் மற்றும் ரவுப்பிலுள்ள இரண்டு மாவட்டங்களில் உள்ள 16 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். இதுதவிர சிலாங்கூரில் கோலா லங்காட்டில் வெள்ளத்தின் காரணமாக நால்வர் வெளியேற்றப்பட்டதாக Nadma எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக மையம் தகவல் வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!